அமெரிக்க செனட் சபையில் 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' நாமம்; பெற்றோரை நெகிழவைத்த எப்.பி.ஐ. இயக்குநர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டதில் இருந்து , அவரது மந்திரிசபை மற்றும் வெள்ளை மாளிகையின் பல்வேறு உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.(FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான காஷ்யப் பட்டேலை எப்.பி.ஐ. இயக்குநராக நியமிக்கும் பரிந்துரையை உறுதிப்படுத்துவதற்கான செனட் உறுப்பினர்களின் விசாரணை நடைபெற்றது. 

இதன்போது செனட் சபைக்கு வந்த தனது பெற்றோரை 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என்று கூறி வரவேற்ற காஷ்யப் பட்டேல், அவர்களின் காலில் விழுந்து ஆசியம் பெற்றுள்ளார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The FBI Director called the parents who said Jai Shri Krishna in the US Senate


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->