அமெரிக்காவில் வாழ்ந்த மிக வயதான பெண் காலமானார்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மிகவும் வயதானவராக அறியப்பட்ட எலிசபெத் பிரான்சிஸ் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில்  கடந்த 1909-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி எலிசபெத் பிரான்சிஸ் என்பவர் பிறந்தார். தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் வசித்து வந்த  எலிசபெத் பிரான்சிஸ் என்பவர், அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதானவராக அறியப்பட்ட இவருக்கு வயது 115.

மேலும் இவர் உலகின் மூன்றாவது வயதானவராக திகழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார்.

இந்த நிலையில், 5 தலைமுறைகளைக் கண்ட எலிசபெத் பிரான்சிஸ் மறைவிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் ஜீலை மாதத்தில்  தனது 115-வது பிறந்தநாளை கொண்டாடிய எலிசபெத் பிரான்சிஸ், நீண்ட நாட்கள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது உள்ளிட்டவை குறித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The oldest woman who lived in america has passed away


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->