இந்தியாவை முடிச்சுவிட்ட மிச்சல்! 12 வருட சாதனைக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்த நியூசிலாந்து!
IND vs NZ Test Series
கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில், இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் தொடரிலும் தற்போது தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தை பொறுத்தவரை, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 156 ரங்களுக்கு அனைத்து விக்கட்டையும் இழந்து அதிர்ச்சி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 359 ரகளை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 245 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது மிச்சல் சான்ட்னர் தான். முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் மிச்சல் சான்ட்னர் கைப்பற்றி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்துட்டு உள்ளார்.
மேலும், இந்திய அணிகள் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் சரியாக ஆடாததும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களை விளையாடி உள்ள இந்திய அணி, ஒரு தொடரில் கூட இதுவரை தோல்வி அடையாமல் இருந்து வந்தது. அந்த சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணி தொடரை 2-0 வென்று சாதனைப்படைத்துள்ளது.