பிரபல நடிகரை கன்னத்தில் அறைந்த பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஸ்மரன் ரெட்டி இயக்கத்தில், அன்ஜன் ராமசந்திரா, ஸ்ரவாணி கிருஷ்ணவேணி, என்.டி.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் 'லவ் ரெட்டி'. கடந்த 18-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்ற படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினர்.

அப்போது லவ் ரெட்டி படத்தில் வில்லனாக நடித்திருந்த என்.டி.ராமசாமியை கண்டதும் பெண் ஒருவர் ஆவேசத்துடன் காதல் ஜோடியை ஏன் பிரித்தாய்? என்று கூறி அவரை அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகரை கன்னத்தில் அறைந்த அந்த பெண் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த என்.டி ராமசாமி, காதல் ஜோடியை கதைப்படி பிரித்ததாக தெரிகிறது. இந்த கதை அந்த பெண்ணின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே அந்தப் பெண் இவ்வாறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman slapped popular actor in banglore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->