தொடரும் பதற்றம்... திருப்பதியில் மீண்டும் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் மூன்று பிரபலமான தனியார் ஓட்டல்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதையறிந்த போலீசார் மோப்ப நாய்களுடன் சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் போலி என்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே, இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டதாக ஓட்டல் நிர்வாகங்களின் சார்பில் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போலீசார் அந்த மின்னஞ்சல்களை அனுப்பியது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to three hotels in tirupathi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->