இலங்கை! காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்வு.
The seven hour curfew in Sri Lanka has been relaxed
இலங்கையில் அத்தியாவசிய தேவைகளுக்காக இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தலைநகர் கொழும்புவில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை சம்பவம் அரங்கேறியது.
இந்த கலவரத்தைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமரின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிரதமரின் இல்லத்திற்கு தீவைத்தனர். இவ்வாறு ஆளும் கட்சியினரும் பொதுமக்களும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனாால ஊரடங்கு பிறப்பித்ததோடு, இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறங்கியுள்ளது .
நாட்டையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போடப்பட்ட ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளுக்காக இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
English Summary
The seven hour curfew in Sri Lanka has been relaxed