ஆஸ்திரேலியாவில் விழுந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் - வீரர்களின் கதி என்ன?
three peoples died for flight accident in austrelia
ஆஸ்திரேலியாவில் விழுந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் - வீரர்களின் கதி என்ன?
ஆஸ்திரேலியா அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டார்வின் நகரில் உள்ள கடற்கரை அருகே நடைபெற்று வரும் இந்தப் பயிற்சியில் சுமார் 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவுக்கு சொந்தமான பெல் போயிங் வி-22 ஆஸ்ப்ரே என்ற விமானம் 23 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் திவி தீவு நோக்கி சென்றது. அதன் பின்னர் அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்வில் தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மீட்பு குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில், விமானம் மெல்வில் தீவில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்புப் படையினர் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு சிகிச்சைக்காக விமானம் மூலம் டார்வின் நகர ஆமருத்துவமனைக்கு கொண்டு ]சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 3 ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 20 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
three peoples died for flight accident in austrelia