அதிகாலையிலேயே நியூசிலாந்து மக்களை அலறவிட்ட நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


அதிகாலையிலேயே நியூசிலாந்து மக்களை அலறவிட்ட நிலநடுக்கம்.!

நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிகாலை நேரத்தில், 11 கிலோ மீட்டர் ஆழத்தில் பல்வேறு இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். 

இது தொடர்பாக நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம், தெரிவித்துள்ளதாவது, "இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை. மேலும், சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலையும் பெறவில்லை என்றுத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today earthquake in new zealand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->