இருளில் மூழ்கிய இலங்கை - நடந்தது என்ன?
today shutdown in whole sri langa
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், மக்கள் 10 மணி நேர மின்தடையை எதிர் கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், எரிபொருள் விநியோகத்திற்கு பணம் செலுத்த முடியாததால் பெட்ரோலை சேமிப்பதற்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு மின் ஒழுங்குமுறை அதிகாரி உத்தரவிட்டார்.
இப்படி பல முறையைக் கையாண்டு, அந்நியச் செலாவணி கையிருப்பு 70 சதவீதம் வீழ்ச்சியடைந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தற்போது மீண்டு வந்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் இன்று நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடை காரணமாக இணைய சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தி தொடர்பாளர் நோயல் பிரியந்த் தெரிவித்துள்ளதாவது:- "மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
today shutdown in whole sri langa