பெண் எழுத்தாளரின் மான நஷ்ட வழக்கு: 10 மடங்கு அதிகம்...  டிரம்ப்க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது அமெரிக்கா பெண்  எழுத்தாளர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார் கடந்த 1996 ஆம் ஆண்டு நியூயார்க் வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் எழுத்தாளர் டிரம்ப் மீது புகார் அளித்தார். 

இந்த குற்றச்சாட்டை மறுத்து டிரம்ப் சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இந்நிலையில் டிரம்புக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தனக்கு 10 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என பெண் எழுத்தாளர் கோரியிருந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் எழுத்தாளருக்கு டிரம்ப் மான நஷ்ட ஈடாக 83 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த தொகை பெண் எழுத்தாளர் கேட்ட தொகையை விட பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்த டிரம்ப் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பு வெளியேறி செய்தியாளர்களிடம், 'இது அமெரிக்கா இல்லை' என தெரிவித்து விட்டு சென்றார். 

இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு டிரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump pay 833 million court orders


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->