துருக்கியில் வெடிவிபத்து.! 40 ஆக உயர்ந்த உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


துருக்கி நாட்டின் வடக்கே உள்ள பார்தின் மாகாணத்தில் அமாஸ்ரா நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென நேற்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பதினான்கு பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியானது. 

இதுபற்றி துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு இன்று தெரிவிக்கும்போது, "இதுவரை நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 40 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. மேலும், 58 சுரங்க தொழிலாளர்கள் அவர்களாகவே தப்பி வெளியேறி வந்துள்ளனர்  கடந்த சில ஆண்டுகளில் துருக்கியில் ஏற்பட்ட மிகக் கடுமையான தொழில் சார்ந்த வெடிவிபத்து இதுவாகும் என்று தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் பதீ டோன்மெஜ் தெரிவிக்கும்போது, மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

turukki firecrack accident forty peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->