பாரம்பரியமிக்க சீன பெருஞ்சுவரில் ஓட்டை போட்ட பெண்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள்.!
two womans arrested for hole in china great wall
பாரம்பரியமிக்க சீன பெருஞ்சுவரில் ஓட்டை போட்ட பெண்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள்.!
கிழக்காசியா நாடான சீனாவில், வரலாற்று சிறப்புமிக்க, உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாக சீனப் பெருஞ்சுவர் இன்றளவும் உள்ளது. இதைப் பார்ப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் மிங் வம்சகாலத்தில் கட்டப்பட்ட இந்த சீனப் பெருஞ்சுவரின் முப்பத்திரண்டாவது பகுதி கலாச்சார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது. இந்தச் சுவர் நான்காயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட ஒன்று.
இந்த சீனப் பெருஞ்சுவர் கடந்த 1987-ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. இந்த நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஓரிடத்தில் மட்டும் இடைவெளி காணப்படுகிறது.
இது தொடர்பாக யூயு கவுன்டி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சீன பெருஞ்சுவரை 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என்று இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, இரண்டு பெண்களும் அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, இந்த செயலைச் செய்துள்ளனர் என்றும், சுவரில் ஓட்டை போட்டுள்ளனர் என்றும், பராமரிப்பு செய்து அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சீன பெருஞ்சுவரின் குறிப்பிட்ட பகுதியின் அமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதால், போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two womans arrested for hole in china great wall