ஓடும் ரெயிலின் மேல் நின்று வீடியோ எடுத்த இரண்டு வாலிபர்கள் கைது.!! - Seithipunal
Seithipunal


ஓடும் ரெயிலின் மேல் நின்று வீடியோ எடுத்த இரண்டு வாலிபர்கள் கைது.!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

அன்றைய தினம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நெய்டாவில் சரக்கு ரெயில் ஒன்று ஒரு நீர்நிலையைக் கடக்கும்போது, இரண்டு கல்லூரி மாணவர்கள் ரெயிலில் மேல் நின்று தங்கள் கைகளை அசைத்தவாறு போஸ் கொடுத்தனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் இளைஞர்கள் குறித்து தகவல்களை சேகரித்து அவர்களை பிடித்தனர். அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், இளைஞர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் பிரபலமடைவதற்காக இந்த வீடியோவை எடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths arrested for take photo on running train in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->