உக்ரைனில் பதற்றம் அதிகரிப்பு... மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..! ஜெலன்ஸ்கி கண்டனம்
Ukraine president Zelensky condemns as Russia attack on ukraine hospital
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 15 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் நகரங்கள் மற்றும் உள் கட்டமைப்புகளின் மீது ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா படைகள் உக்ரைனின் கிழக்கு நகரமான டினிப்ரோவில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் டினிப்ரோவின் முக்கிய மருத்துவமனையின் உள்கட்டமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை தளங்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து டினிப்ரோ மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டரில் ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ஒரு ராணுவத்தின் நோக்கம் மருத்துவமனையின் மீது இருக்காது. ஒரு தீய அரசால் மட்டுமே மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்த முடியும். இது ஒரு சுத்தமான பயங்கரவாதம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா தனது சொந்த விருப்பத்தில் தீமையான பாதையை தேர்வு செய்துள்ளது. அந்த பயங்கரவாதத்தை நாம் தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Ukraine president Zelensky condemns as Russia attack on ukraine hospital