பக்முத் நகரை பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி.!
Ukraine president Zelensky visit bakhmut city
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைனின் நான்கு மாகாணங்களை ரஷ்யாயுடன் இணைத்துக் கொண்டது.
இதைதொடர்ந்து ரஷ்ய படைகள் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் முக்கிய இலக்காக பக்முத்தில் தீவிர தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் நகரம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில், டொனெட்ஸ்க் கிழக்கு பக்முத் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி பயணம் மேற்கொண்டு, அப்பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் தீரத்துடன் ஈடுபட்ட வீரர்களை சந்தித்து, பாராட்டுகளை தெரிவித்து விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளார்.
English Summary
Ukraine president Zelensky visit bakhmut city