#BREAKING : உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்கு தயார் - ரஷ்யா.!
Ukraine ready for talks if military stops fighting Russia
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கொடூரமான தாக்குதலை இரண்டாவது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளது. அதேபோல் உக்ரைன் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதனையடுத்து ரஷ்யா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் இரண்டாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ukraine ready for talks if military stops fighting Russia