உக்ரைனில் ஆக்ரோஷமாக வீசிய பனிப்புயல்: உயிர் சேதம் குறித்து அதிபர் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


உக்ரைன் தெற்கு பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனி புயலால் 5 பேர் உயிரிழந்ததாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். 

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த சுமார் 21 மாதங்களாக நடந்து வருகின்றதால் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நேற்றிரவு உக்ரைனில் வீசிய கடுமையான பனி புயலால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மேலும் பனிப்புயல் காரணமாக 17 மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த வேகத்துடன் வீசிய பனிக்காற்று காரணமாக மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சார தடை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக உக்கரை முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine snow storm 5 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->