"மனிதாபிமான உதவி" கோரி.. பிரதமர் மோடிக்கு ஜெலன்ஸ்கி கடிதம்..!
Ukraine Zelensky letter to India Prime Minister Modi requesting humanitarian assistance
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. தற்பொழுது ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்போரில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அளித்து வருகின்றன. இந்நிலையில் போரினால் பாதிப்படைந்த மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள உக்ரைன் துணை வெளியுறவு மந்திரி எமின் டிஜெப்பர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகியை டெல்லியில் சந்தித்தபோது கொடுத்தார். அக்கடிதத்தில், உக்ரைனுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி வழங்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Ukraine Zelensky letter to India Prime Minister Modi requesting humanitarian assistance