போரில் உயிரிழந்த வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், போரில் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் உளவு அறிக்கையின் தகவலின் படி, இதுவரை சுமார் 1,20,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்கு அருகே மோஷ்சுனில், போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்களின் நினைவாக 'வெற்றியின் தேவதைகள்' என்ற பெயரில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மோஷ்சுனில் கட்டப்பட்ட நினைவிடத்தில் போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்பு உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு மரியாதையையும், விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்களிடம் உரையாற்றினார். அப்போது, மோஷ்சுன் பகுதி போர் வரலாற்றில் முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது. கீவ் நகரை கைப்பற்ற இப்பகுதி வழியாக ரஷ்யப் படைகள் மூன்று முறை செல்லும்பொழுதும் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி ரஷ்ய படைகளை விரட்டியடித்தாக தெரிவித்துள்ளார்.

மேலும் மோஷ்சுன் பகுதி ஒரு நினைவு பாதையாக மாற வேண்டும் என்றும், நிச்சயமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukrainian President Zelensky pays tribute to soldiers who died in the war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->