இலங்கைக்கு 1.4 மில்லியன் டாலர் நிதி உதவி - ஐநா அறிவிப்பு
UN announced 1 point 4 million financial assistance to srilanka
அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோல் ,டீசல் , சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வளர்ந்த நாடுகளின் உதவியுடன் பொருளாதார நிலையை இலங்கை அரசு கட்டமைத்து வருகிறது. குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு ஐ.நா நேரடியாக உதவி வருகின்றன.
இதுவரை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு 47,609 குடும்பங்களுக்கு 2,300 டன் உரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவும் பின்தங்கிய 15000 ஏழை குடும்பங்களுக்கு பணமாக 1.4 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளதாக எப்.ஏ.ஓ. தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கை மக்களில் 40 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் இல்லாததால் விவசாய உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
மேலும் கால்நடை தீவனப் பொருள்கள் கிடைக்கப் பெறாமலும், மீனவர்களின் மோட்டார் பொருத்திய படகுகளுக்கு எரிபொருள் கிடைக்கப்பெறாமலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
UN announced 1 point 4 million financial assistance to srilanka