ஐ. நா. வால் தனது சொந்த ஊழியர்களைக் கூட பாதுகாக்க முடியாது.. துருக்கி அதிபர் எர்டோகன் காட்டம்..!!
United Nation Cant Save Their Own Staffs Says Turkey President
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து 8 மாதங்களாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு மீதான தாக்குதல் இது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் ரஃபா நகரின் மீது வான் தாக்குதல் நடத்தியதில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. மேலும் இத்தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து கூறிய இஸ்ரேல், "தவறுதலாக இத்தாக்குதல் நடந்துவிட்டதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறியது.
பல்வேறு நாடுகளும் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், "ALL EYES ON RAFAH" என்ற ஹேஷ் டேக் உடன் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் கூடியது.
இந்நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஐ. நா. வை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய எர்டோகன் , "ஐ. நா. வால் தனது சொந்த ஊழியர்களைக் கூட பாதுகாக்க முடியாது. ஐ. நா. வின் ஆன்மா ரஃபா வில் இறந்து விட்டது" என்று பேசியுள்ளார்.
மேலும் பேசிய எர்டோகன், "இஸ்ரேல் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்படாமல் இருக்கிறது. இஸ்ரேலின் இந்நிலைப்பாடு உலக நாடுகளுக்கு பெரும் அசச்சுறுத்தல்" என்று கூறியுள்ளார்.
English Summary
United Nation Cant Save Their Own Staffs Says Turkey President