தாய்லாந்து: குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 38 பேர் பலி - அமெரிக்கா கடும் கண்டனம் - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் நேற்று மதியம் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 24 குழந்தைகள் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளையும் தாய்லாந்து பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலை நடத்தி, 35 பேரை கொன்று குவித்ததுடன், தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர் பன்யா காம்ரப்(34) என்பதும், நா வாங் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி, கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த தாக்குதல் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவேன் வெளியிட்ட அறிக்கையில், 

இந்த கொடூர சம்பவத்தால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சம்பவம் இடத்திலிருந்து வெளியான படங்கள் நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான தாய்லாந்திற்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Condemns 38 Killed in Shooting at Thailand Child Care Center


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->