நடப்பாண்டில் உலகிலேயே அதிகபட்சமாக 82,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் நடப்பாண்டில் உலகிலேயே அதிகபட்சமாக 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் நடப்பாண்டில் இதுவரை 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கியுள்ளது. இது உலகில் மற்ற நாடுகளைவிட அதிகமாகும். மொத்தம் விசா வழங்கப்பட்ட மாணவர்களில் 20% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள தூதரகங்கள் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்  வரை மாணவர்களுக்கான விசாக்களை பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளன.

இது குறித்து அமெரிக்க தூதரகப் பொறுப்பாளர் பாட்ரிசியா லசினா தெரிவித்ததாவது,

"கொரோனாவால் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, தற்போது மாணவர்கள் பலரும் விசா பெற்று தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர். இதனை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கோடையில் மட்டும் 82,000 மாணவர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளோம். இது கடந்த ஆண்டை விட அதிகம்.

பெரும்பாலான இந்தியர்கள், உயர்கல்விக்காக அதிகம் விரும்பும் நாடாக அமெரிக்கா உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்கர்களுடன் தொடர்பை வளர்த்துக்கொள்வதால் நம் இரு நாடுகளுக்கும் இந்திய மாணவர்கள் செய்யும் முக்கியப் பங்களிப்பை இது காட்டுகிறது". என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US embassy this year issued visas to 82,000 students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->