அமெரிக்காவில் கடனுக்கான வட்டி விகிதம் 14 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு உயர்வு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போர் விளைவாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகளால் பல நாடுகள் தங்கள் பணவீக்க பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் விகிதங்களை உயர்த்துகின்றன. இந்நிலையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அமெரிக்கா பண வீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் நோக்கமானது அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பணவீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2 சதவீதத்தில் அடைவதாகும்.

ஆனால் அமெரிக்காவில் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும் பணவீக்கம் 2 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது. 

இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் 3.75 சதவீதம் என்ற நிலையிலிருந்து 4 சதவீதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2008ஆம் ஆண்டுக்கு பின், அதிகபட்ச வட்டி விகித உயர்வாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Fed hikes interest rates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->