அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம்.!
US President Joe Biden makes a surprise visit to Ukraine
ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது.
மேலும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் மற்றும் ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தலைநகரில் சந்தித்துள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றிருப்பது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
English Summary
US President Joe Biden makes a surprise visit to Ukraine