செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பேரழிவு உண்டாகும் - அமெரிக்க அதிபர் - Seithipunal
Seithipunal


அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஓபன் ஏஐ என்ற நிறுவனம் கடந்த ஆண்டு சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சாட் ஜிபிடி நாம் கேட்கும் கேள்வி, கல்லூரி தேர்வுகள், போட்டி தேர்வுகள், வடிவமைப்பு என அனைத்திற்கும் துல்லியமாக பதில் அளிக்கிறது. இதுவரை அறிமுகப்படுத்திய ஏஐ தொழில்நுட்பத்தில் சாட் ஜிபிடி மிகவும் சக்திவாய்ந்தாக கருதப்படுகிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சமூகத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கூட்டத்தில் பேசிய அமெரிக்கா அதிபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நோய் காலநிலை மாறுபாடு மற்றும் உயிரியல் செயற்கை வடிவமைப்பு ஆகியவற்றுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஆனால் சரியான பாதுகாப்புகள் இல்லாமல் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது ஆபத்தானது என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறான நோக்கில் பயன்படுத்தப்பட்டால் அது மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கும் என்றும், நமது சமூகத்திற்கும், நமது பொருளாதாரத்திற்கும், நமது தேசிய பாதுகாப்பிற்கும் ஏற்படக்கூடிய அபாயங்களை நாம்தான் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Us president says artificial intelligence technology will cause diaster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->