இந்திய மாலுமிகளுக்கு ஜோ பைடன் பாராட்டு.!!
USA president Joe Biden praised Indian sailors
அமெரிக்காவில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் நேற்று சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்திய மாலுமிகளால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் தெரிவித்துள்ளார்.
பாலம் விபத்து குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "பிரான்சிஸ் ஸ்காட் கி பாலம் விபத்து ஏற்படும் முன்பு அதுகுறித்து இந்திய மாலுமிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதன் காரணமாக விபத்து ஏற்படுவதற்கு முன்பே பாலத்தில் போக்குவரத்தை நிறுத்த தகவல் கொடுக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புனிதமாக செயல்பட்ட இந்திய மாலுமைகளை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
USA president Joe Biden praised Indian sailors