எரிமலை வெடிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
volcanic eruption Meteorological Center Warning
1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் எரிமலை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை:
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றி உள்ள பகுதியில் 1,600 முறை நில அதிர்வு நேற்று ஏற்பட்டதாக அந்த நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1600 முறை நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில், தலைநகர் பகுதியில் மிக அதிக அளவில் உணரப்பட்டதாகவும், அது மேலும் தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் எரிமலை வெடிக்கலாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதில் குறிப்பாக நான்கு அதிர்வுகள் மட்டும் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்ததால், இது லேசான நிலநடுக்கும் என கருதப்படுகிறது. இருப்பினும் அந்நாட்டில் விமானம் பறப்பதற்கு ஆரஞ்சு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எரிமலை வெடிப்பதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தெரியவில்லை என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2021 மற்றும் 2022-ல் வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடாக கருதப்படும் ஐஸ்லாந்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இந்த நில அதிர்வுகள் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்டுள்ளது.
English Summary
volcanic eruption Meteorological Center Warning