வெள்ளை மாளிகை நுழைவு வாயில் மீது மோதிய மர்ம கார்: சதி செயலா? தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த பாதுகாப்பை மீறி நேற்று மர்ம கார் ஒன்று வெள்ளை மாளிகை நோக்கி வந்து திடீரென மாளிகையின் வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவாயில் மீது மோதியது. 

இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்து அதிகாரிகள் உடனடியாக காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் தற்செயலாக நடந்ததா? அல்லது சதி செயலா  என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகை மாளிகையில் இல்லாமல் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தார். 

இது போன்ற அத்துமீறல்கள் வெள்ளை மாளிகைகளில் அடிக்கடி நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவ வீரர் ஒருவர் சட்டை பையில் கத்தியுடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ட்ரம்ப் அதிபராக இருந்தபோது மாளிகையின் வேலியை அளந்த ஒருவர் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White House gate car crashes police Investigate 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->