குரங்கமைக்கான அவசரநிலை நீக்கம்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


குரங்கம்மை நோயை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அதன் அறிகுறிகள் அந்த அளவுக்கு கடுமையாக இருந்தது. இந்தியாவில் பெரும்பாலோனரை குரங்கம்மை நோய் பாதிக்கவில்லை என்றாலும் பிற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகமாக இருந்துள்ளது. குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அறிகுறிகளின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் எமர்ஜென்ஸி கமிட்டி கூட்டத்தில் குரங்கம்மை நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தீவிர அறிகுறிகளை கருத்தில் கொண்டு குரங்கம்மை நோயை அவசர நிலை பட்டியலிலிருந்து நீக்க மறுத்திருந்தது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மை நோய்க்கான எமர்ஜென்சியை உலக அளவில் நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 111 நாடுகளில் இருந்து 87,000க்கும்  அதிகமானோர் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 140 பேர் இருந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் கிட்டத்தட்ட 90% குறைவான நபர்கள் குரங்கமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பொது சுகாதார ஊழியர்களுடன் சேர்ந்து சமூக அமைப்புகளின் பணி, குரங்கமை நோயின் அபாயங்களை மக்களுக்குத் தெரிவிப்பது, சோதனைகள் மேற்கொள்வது, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO announced Emergency lifted for monkeypox


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->