சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் சரியானவை.! உலக சுகாதார மையம்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

மேலும் பல நாடுகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில் தங்கள் நாடுகளில் கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்தியா, தென் கொரியா, இத்தாலி, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

இதில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், சில நாடுகள் தங்கள் குடிமக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பது சரியானது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஜெனீவாவில் காணொலிக்காட்சி வழியாக பேட்டி அளித்தபோது, சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நடவடிக்கைகள் எடுப்பது சரியானவை, புரிந்துகொள்ளத்தக்கவை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO says Restrictions for travelers from China are correct


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->