ரயில் முன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்- அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal



"பேரரசி" என்று பெயரிடப்பட்ட ஒரு பழங்கால நீராவி எஞ்சின் ரயில், கடந்த ஏப்ரல் மாதம் தனது பயணத்தை கால்கரியில் இருந்து தொடங்கியது. மேலும் இந்த நீராவி எஞ்சின் ரயில் கனடா மற்றும் அமெரிக்கா வழியாக பயணித்து இறுதியாக மெக்சிகோவைச் சென்றடையும் என்று கூறப்பட்டது.

முன்னதாக இந்த நீராவி எஞ்சின் ரயில் 1930ம் ஆண்டு கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை உருவாக்கியதை அடுத்து, அந்த நட்பு ரீதியான இணைப்பைக் கொண்டாடுவதற்காக இந்த நீராவி எஞ்சின் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மெக்சிகோவில் தனது பயணத்தை நிறைவு செய்யவுள்ள பேரரசி ரயிலானது, நேற்று மெக்சிகோவின் ஹிடால்கோ பகுதியில் நுழையும்போது, அங்குள்ள மக்கள் பலர் ரயில் முன் புகைப்படம் எடுப்பதற்காக கூடியிருந்து உள்ளனர். 

அப்போது ஒரு இளம்பெண், தனது மகனுடன் வந்து ரயிலின் அருகில் சென்று தண்டவாளத்தில் முட்டி போட்டு ரயில் முன் அமர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ரயில் அருகே வரும்போது அதன் எஞ்சின் பகுதி அந்த பெண்ணின் தலையில் பட்டு அந்த இடத்திலேயே, அப்போதே அவரது உயிர் பிரிந்துள்ளது. இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வைரலாகி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Tried to Taken Selfie infront Of Train


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->