ஏலம் விடப்பட்ட உலகின் மிகப் பழமையான புத்தகம், அதன் விலை...!! - Seithipunal
Seithipunal


காலத்தால் மிக பழமையான பொருட்கள் எப்போதுமே விலைமதிக்க முடியாதவை. ஒரு சிலர் பழைய நாணயங்கள், காசுகள், கைக்கடிகாரங்கள், பழைய முத்திரைகள், தபால் அட்டைகள் போன்றவற்றை சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர், அந்த பொருட்களை சரியான நேரம் வரும்போது, ​​அவற்றை ஏலத்தில் விட்டு நல்ல விலைக்கு விற்பார்கள். 

இதுபோல் மேலும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சேகரிப்பில் பாதுகாத்து வைத்திருந்த உலகின் மிகப் பழமையான ஒரு புத்தகம் லண்டன் நகரில்  ஏலம் விடப்பட்டது. அந்த ஏல நிகழ்ச்சியில் இந்த Crosby-Schoyen Codex என்னும் பழமையான புத்தகத்தின் விலை 3 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த உலகிலேயே பழமையான இந்த புத்தகத்தின் ஏலம் முதலில் 1.7 மில்லியன் பவுண்டுகளுக்கு ஆரமிக்கப்பட்டது. இந்த Crosby-Schoyen Codex புத்தகம் இதற்க்கு முன்பு நோர்வே தொழிலதிபரும் பழங்கால புத்தக சேகரிப்பாளருமான மார்ட்டின் ஸ்கோயன் என்பவரிடம் இருந்தது.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் இரண்டு நூல்களின் பழமையான பிரதிகள் இந்த ஏலம் விடப்பட்ட புத்தகத்தில் உள்ளன. முதலாவது 'யோனாவின் புத்தகம்' மற்றும் இரண்டாவது 'பேதுருவின் முதல் நிருபம்' ஆகியவை இந்த புத்தகத்தில் இருந்தன. இந்த பழமையான புத்தகம் ஏலத்தில் 3 லட்சத்து 65 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது.

இந்த Crosby-Schoyen Codex 1950ஆம் ஆண்டுகளில் எகிப்திய விவசாயிகளால் கண்டெடுக்கபட்டது. இந்த புத்தகம் கி.பி நான்காம் நூற்றாண்டில் சேர்ந்த எகிப்தில் உள்ள ஒரு துறவியால் நகலெடுக்கப்பட்டது. இது குறைந்தது 1,600 ஆண்டுகள் பழமையானதாகவும், 1450 களில் இருந்ததாக நம்பப்படும் குட்டன்பெர்க் பைபிள் போன்ற மிகவும் பிரபலமான பண்டைய நூல்களை விடவும் மிகவும் பழமையானதாகவும் ஆய்வில் தெரிய வந்தது.

இந்த புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் காப்டிக் எழுத்தில் இரட்டை பக்க பாப்பிரஸ் இலைகளில் எழுதப்பட்டுள்ளது. உரைஇந்த புத்தகத்தை தற்போது பிளெக்ஸிகிளாஸ் தட்டுகளுக்கு இடையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மார்ட்டின் ஸ்கோயன் சேகரிப்பில் இருந்து 12 கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கிய பக்கங்கள் ஏல நிகழ்ச்சியில் ஏலம் விடப்பட்டன. இணையதளத்தில் உள்ள அந்த புத்தகத்தின் முழுத் தொகுப்பிலும் கிமு 3,500 முதல் தற்போது வரை 5,000 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட 20,000 க்கும் மேற்பட்ட துண்டுகள் அதனுடன் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world oldest book auctioned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->