உலகின் மிக வயதான நபர் டோமிகோ இடுகா காலமானார்! - Seithipunal
Seithipunal


ஜப்பான்: உலகின் மிக வயதான நபராக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோமிகோ இடுகா (116) வயது முதிர்வும் உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த டிசம்பர் 29-ம் தேதி மரணமடைந்தார்.

இடுகா, 1908-ம் ஆண்டு மே 23-ம் தேதி ஜப்பானின் அஷியா நகரில் பிறந்தவர். தனது வாழ்க்கையின் இறுதியில், அவர் நர்சிங் ஹோமில் வசித்து வந்தார்.

இடுகா தனது வாழ்நாளில் உலகப் போர்கள், தொற்றுநோய்கள், மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அனுபவித்துள்ளார். எளிய வாழ்க்கை முறையை கொண்ட அவர், வாழைப்பழங்கள் மற்றும் கால்பிஸ் எனும் குளிர்பானத்தை விரும்பினார்.

அவருக்கு நான்கு வாரிசுகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர்.அஷியா நகரின் மேயர் ரியோசுகே தகஷிமா, "இடுகா, தனது வாழ்க்கை முழுவதும் பல மாற்றங்களைப் பார்த்து நம் உலகின் வரலாற்றுச் சாட்சியமாக இருந்தார். அவரது சாதாரண வாழ்க்கை சிறந்த அனுபவங்களை வழங்கியுள்ளது" என்று பாராட்டு தெரிவித்தார்.

இடுகாவின் மரணத்துடன், உலகின் புதிய மிக வயதான நபர் யார் என்பதை கின்னஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Oldest Person Tomiko Iduka Passes Away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->