இளைஞரின் உயிரை பறித்த டாட்டூ.!! டெல்லியில் பரிதாபம்.!!
young man sucide in delhi for tatoo
இளைஞரின் உயிரை பறித்த டாட்டூ.!! டெல்லியில் பரிதாபம்.!!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவைச் சேர்ந்தவர் அபிஷேக் கௌதம். இவர் கடந்த 2020ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்காக டெல்லியில் தங்கி படித்து வந்தார். இதற்காக அவர் ராஜிந்தர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அபிஷேக் ஒருநாள் தனது கையில் (டாட்டூ) பச்சைக் குத்தியுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர் லலித் மிஸ்ரா, டாட்டூ குத்துபவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும்கூட ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அபிஷேக் இணையத்தில் டாட்டூ குத்துவது தொடர்பான ஐபிஎஸ் தேர்வு விதிகள் குறித்தும், அந்த டாட்டூவை எவ்வாறு அகற்றுவது, அதற்கான நுட்பங்கள், சாத்தியக்கூறுகள் மற்றும் செலவுகள் உள்ளிட்டவைக் குறித்தும் தேடியுள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அவரது நண்பர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் அபிஷேக் தங்கியிருந்த அறையில் ஏதாவது துப்பு இருக்குமா? என்று போலீசார் சோதனையிட்டனர். ஆனால் எதுவும் இல்லை. இதற்கிடையே அபிஷேக்கின் குடும்ப உறுப்பினர்கள் அவரது தற்கொலைக்குப் பின்னால் சதி இருப்பதாகக் கூறி புகார் அளித்தனர்.
அதன் படி போலீசார் அபிஷேக் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவருடன் வசித்தவர்கள் என்று அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆகவே போலீஸார் இதனை டாட்டூ தொடர்பான தற்கொலையாகக் கருதி தற்போது இந்த வழக்கை முடித்துவைத்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
English Summary
young man sucide in delhi for tatoo