ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதன் மூலம் என்ன பயன்? ஈரானுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்...! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத தொகுப்புகளை அளித்து வருகின்றன. மேலும் கிழக்கு நகரங்களில் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானிலிருந்து பெறப்பட்ட சக்தி வாய்ந்த ஷாஹெட்சஸ்-136 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்கி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கி வரும் ஈரானுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் பொழுது, பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருப்பதில் ஈரானுக்கு ஆர்வம் என்ன? தாழ்ந்த செயல்களை செய்வதன் மூலம் ஈரானுக்கு என்ன பயன்? என தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் மக்களை பயமுறுத்தும் ஷாஹெட்சஸ் ட்ரோன்களால் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு ஈரான் மக்கள் தள்ளப்படுவதாக தெரிவித்த அவர், ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky condemns What is use of Iran in supplying drones to russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->