போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தூதரக ரீதியான தீர்வை முன்னெடுக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி
Zelensky Russia must pursue a diplomatic solution to end the war
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவிடமிருந்து முக்கிய ஆக்கிரமிப்பு பகுதிகளை உக்ரைன் படைகள் கைப்பற்றியதால் ரஷ்யபடைகள் இரண்டாம் கட்ட தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகின்றன.
இதனால் போர் முடிவுறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷ்யா முன்னெடுக்க வேண்டும் என்றும், தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷ்யா வாபஸ் பெறச்செய்தால் போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும் என்றார். இதைத்தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, போருக்கு நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை ஜி7 அமைப்பு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
English Summary
Zelensky Russia must pursue a diplomatic solution to end the war