இந்தியா உள்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம்.! அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
Zelensky sacks Ukraine ambassadors to India and 4 other nations
இந்தியா உள்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நூறு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போ ஊரில் உக்கரையனின் ஆயிரம் கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும் உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் கிடைக்க உலக நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரிக்கான உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அதிபர் மாளிகையில் இருந்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
மேலும் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார வகையான உதவிகளை ஜெர்மனி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Zelensky sacks Ukraine ambassadors to India and 4 other nations