ரஷ்ய தாக்குதலில் இதுவரை 500 உக்ரைன் குழந்தைகள் உயிரிழப்பு - ஜெலன்ஸ்கி வேதனை
Zelensky says 500 Ukraine children died sofar in Russia war
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யா படைகளின் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நிப்ரோ நகரில் நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யப் படைகளின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 வயது சிறு குழந்தையின் சடலம் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய படைகளின் வெறுப்பு மற்றும் ஆயுதங்கள் ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளை அழித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ரஷ்யத் தாக்குதலில் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளது என கண்டறிவது கடினம் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து உக்ரைனின் முழு பகுதியும், உக்ரைன் மக்கள், குழந்தைகள் என அனைவரும் ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து விடுபட வேண்டும். உக்ரைனின் பிரபலமான அறிஞர்கள், கலைஞர்கள், சாம்பியன்கள் போரை எதிர்த்து நின்று வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Zelensky says 500 Ukraine children died sofar in Russia war