கெர்சன் மாகாணத்தில் கடந்த வாரம் 258 முறை ரஷ்யா ஷெல் தாக்குதல் - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதால் கெர்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன. 

இதனால் ரஷ்ய படைகள் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 30 குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் 258 முறை ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய நிலையில், எதிர்க் கரையில் உள்ள புதிய இடங்களிலிருந்து கெர்சன் நகரம் உட்பட நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மேலும் கெர்சனுக்கு வடமேற்கே உள்ள மைகோலேவ் நகருக்கு தண்ணீர் வழங்கும் பம்பிங் ஸ்டேஷனை ரஷ்யப் படைகள் சேதப்படுத்தியதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zelensky Says Russia Shells attack on Kherson Region 258 Times In A past Week


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->