இந்தியாவின் பாதாள சொர்க்கம்! 1000 ஆண்டுகால கலைநயம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!! - Seithipunal
Seithipunal


ஆழமான…மிக அழகான கலைக் கிணறு… பாதாள சொர்க்கம் - சுற்றுலா
தன் காதல் கணவனுக்காக, தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக உதயமதி உருவாக்கிய கிணறு ஒன்று 1050-ல் கட்டப் பட்டது. ஆயிரம் ஆண்டுகளைத் தொடக் காத்திருக்கும், இந்த அதிசயக் கிணற்றை, 1974-ஆம் ஆண்டு தான், உலகம் அறிந்தது. அது வரை, மண்ணில் மூடியிருந்தது, இந்த உலகம் போற்றும் இந்தக் கலைக் கோயில் கிணறு.

Related image

இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்கில் ஒன்று இந்தக் கலைக் கிணறு. யுனெஸ்கோ, 2014-ஆம் ஆண்டு, இந்தக் கலைக் கிணற்றினை, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. மற்ற சுற்றுலாத் தலங்கள் எல்லாம், சட்டென்று வெளிப் பார்வைக்குத் தெரியும்படியாக இருக்குRelated imageம்.

ஆனால், இந்த நினைவுச் சின்னம், அருகே நெருங்க நெருங்கத் தான் தெரிய வரும். 64 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், மற்றும் 27 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த அதிசயக் கிணற்றுக்குச் செல்ல ஏழு நிலைகளில் இறங்கிச் செல்ல வேண்டும். 
எப்படிக் கீழே இறங்கினோம், எந்த திசையில் இருக்கிறோம்? என்பதே தெரியாத அளவிற்கு, சுற்றிலும், கற்களால் செய்யப்பட்ட, மிக அற்புதமான கலை நயம் மிக்க சிற்பங்களுடன் கூடிய மண்டபங்களைப் பார்க்கும் போது, பாதாள சொர்க்கம் என்று நிச்சயம் இதற்கு நாம் சான்றிதழ் தரலாம்.Image result for குஜராத் பதான் பாதாளக் கிணற்றை

அவ்வளவு கலை நயம் மிக்கது, இந்த பாதாள மண்டபங்கள். எப்படி, இந்த அளவு  கலை அம்சம் உள்ள, சிலைகளை நுணுக்கமாக வடிவமைத்தார்கள்? என்று யோசிப்பதற்குள்ளாகவே, அடுத்த இடம் வந்து விடும். பெரும்பாலும், வைஷ்ணவம் சார்ந்த கடவுள்களின் சிற்பம் உட்பட 800 சிற்ப்ஙகள்  காணக் கிடைக்கின்றன.

Image result for இந்தியாவின் அதிக நீளமான குகை
இந்தக் கலை நயத்தைக் காணும் போது, இந்த உதயமதி, எத்தனை நேர்த்தியான கலை உணர்வு மிக்கவள்? என்று தான் வியக்கத் தோன்றும். கீழே உள்ள பகுதியில் கற்களால் ஆன பெரிய குழாய் பகுதிகள் தென் படுகின்றன. இது சுரங்கப் பாதை. இங்கிருந்து சித்பூர் என்ற பகுதிக்கு 32 கி.மீ. தொலைவில் செல்கிறது.

Image result for குஜராத் பதான் பாதாளக் கிணற்றை

''இந்த அதிசயப் பாதாளக் கிணற்றைக் காண, குஜராத் மாநிலம், பதான் என்ற பிரதான மாவட்டப் பகுதியில் தான் இருக்கிறது. ஒரு வாரம் சுற்றிப் பார்த்தாலும் அலுக்காத மனதை விட்டு அகலாத காதல் சின்னம் இது''. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India's underground paradise! Do you know about 1000 years of archaeology


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->