விஜயகாந்த் நினைவு நாள் - வாழ்த்துக்கள் தெரிவித்த ரஜினிகாந்த்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் வெளியூரில் இருந்த வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இன்று விஜயகாந்த் மறைந்து ஒர் ஆண்டு ஆகியுள்ளது என்றுத் தெரிவித்தனர்.

அதற்கு ரஜினிகாந்த் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாழ்த்துகள் என்றுத் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், மீண்டும் அதனை தெளிவாக கூற, ஒ அப்படியா என்று கூறினார்.

பின்னர் கூலி படம் நல்லா போகுது எனவும் படம் 70 சதவீதம் முடிவடைந்ததாகவும் தெரிவித்தார். ஏற்கனவே திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து கேட்டதுக்கு அப்படியா, எப்போ நடந்துச்சு oh my god Extremely Sorry என்று ரஜினிகாந்த் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor rajinikant congracts vijayakant memorable day question


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->