அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தில் 03 கதாநாயகிகள் ..?
03 female leads in the film to be made in the Allu Arjun and Atlee collaboration
தெலுங்கின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, சமந்தா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஜான்வி கபூர், திஷா பதானி மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகிய மூன்று பாலிவுட் நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில், ஜான்வி கபூர் முதன்மை கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
03 female leads in the film to be made in the Allu Arjun and Atlee collaboration