ஓடிட்டியில் வெளியாகும் வீர தீர சூரன் 2 - எப்போது தெரியுமா?!
veera theera sooran 2 movie ott update
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபல நடிகர் சித்தார்த் நடித்த திரைப்படம் சித்தா. இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் தற்போது விக்ரம் நடித்துள்ள படம்'வீர தீர சூரன் 2' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான இந்தப் படம் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் 'வீர தீர சூரன் 2' படம் வரும் 24ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
veera theera sooran 2 movie ott update