63 ஆயிரத்தி 124 ஆயிரம் பேர்‌! "கணக்குமாமணி ஸ்டாலின்" வைரல் வீடியோ! சீனிவாச ராமானுஜமே வியக்கும் கணித மேதை! கலாய்த்த அதிமுக! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிகழ்ச்சியில் பேசும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 63 ஆயிரத்தி 124 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம்" என்று சொல்வதற்கு பதிலாக,  "63 ஆயிரத்தி 124 ஆயிரம் பேர்‌" என்று தவறாக எண் கணக்கிட்டு கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அதிமுக ஐடி விங்க், "63 ஆயிரத்தி, 124 ஆயிரம் பேர்! சீனிவாச ராமானுஜமே வியக்கும் கணித மேதை for a reason! #கணக்குமாமணி_ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளது.


 

திருவள்ளூரில் புது திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலினின் ஐந்து முக்கிய அறிவிப்புகள்

தண்டலம்–கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடி மதிப்பில் புதிய உயர்மட்டப் பாலம் கட்டப்படும்.

அறிவிப்பு 2:
மணவூர்–இலட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே ரூ.23.47 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

அறிவிப்பு 3:
திருவள்ளூர் மாவட்ட காக்களூர் பகுதியில், தாமரைக்குளம் மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகள் ரூ.2.27 கோடியில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

அறிவிப்பு 4:
பழவேற்காடு ஏரியில் சுற்றுலா வசதிகள் உருவாக்கப்படும். வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களுக்காக வலை பின்னும் கூடம் அமைக்கப்படும்.

அறிவிப்பு 5:
திருமழிசை–ஊத்துக்கோட்டை சாலையில் வாகனப்போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ரூ.51 கோடி செலவில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MK Stalin Misleading maths ADMK Viral video


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->