அர்ஜுனின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்.!!
actor arjun second daughter engagement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இவர் சமீபகாலமாக ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

இளைய மகள் அஞ்சன சமீபத்தில் "கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்" என்று தனது இன்ஸ்டாகிராமில் காதலரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், இத்தாலியில் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.
English Summary
actor arjun second daughter engagement