மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மேலும் உயர்கிறது!
mobile recharge costs hike
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தற்போதைய செலவுகள் மற்றும் 5G பரவலான வசதிகளை வழங்கும் நோக்கில், வரும் ஆண்டின் இறுதிக்குள் தங்களின் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 20% வரை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்கள், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை விரைவில் திருத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது 2019 பிற்பாட்டிலிருந்து இதுவரை நிகழவுள்ள நான்காவது பெரிய கட்டண உயர்வாகும்.
வல்லுநர்கள் கூறுகையில், ரூ.100–200 வரை உள்ள குறைந்த விலை திட்டங்கள் 10% வரை உயரலாம். ரூ.300–500 இடைநிலை திட்டங்கள் 15% வரை உயர வாய்ப்புள்ளது. பிரீமியம் 5G திட்டங்களில் விலை உயர்வு 20% வரை இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டு செலவுகள், ஸ்பெக்ட்ரம் கட்டணம் மற்றும் 5G அடிப்படை கட்டமைப்புக்கு மேற்கொள்ளப்படும் பெரும் முதலீடுகள் இவ்விலை உயர்வுக்குக் காரணமாக கூறப்படுகின்றன.
English Summary
mobile recharge costs hike