6,691 கோடி இன்னும் திரும்ப வரல! ரூ.2000 நோட்டு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரிசர்வ் பேங்க்!
2000 rupee note RBI
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 19, 2023-ல் வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் ₹2000 மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
₹2000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தல் தொடர்பான நிலைமை குறித்து அவ்வப்போது RBI வெளியிட்டு வருகின்றது. அதன்படிஇ தற்போது வெளியிட்ட அறிவிப்பில்,
₹2000 நோட்டுகளை வங்கி கிளைகளில் டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்ற வசதி அக்டோபர் 07, 2023 வரை வாய்ப்பு இருந்தது.
மே 19, 2023 முதல் RBI வெளியீட்டு அலுவலகங்களில் (RBI Issue Offices) ₹2000 நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி உள்ளது. அக்டோபர் 09, 2023 முதல், RBI வெளியீட்டு அலுவலகங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ₹2000 நோட்டுகளை அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய ஏற்கின்றன.
மேலும், பொதுமக்கள், தபால் அலுவலகங்களின் மூலம் ₹2000 நோட்டுகளை இந்திய தபாலின் மூலம் அனுப்பி, எந்த RBI வெளியீட்டு அலுவலகத்திலும் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம்.
மே 19, 2023 அன்று ₹2000 நோட்டுகளின் புழக்க மதிப்பு ₹3.56 லட்சம் கோடியாக இருந்தது. 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த போது, ₹2000 நோட்டுகளின் புழக்க மதிப்பு ₹6,691 கோடியாக குறைந்துள்ளது. தற்போது ₹2000 நோட்டுகளின் மொத்த புழக்கத்தின் 98.12% திரும்ப வந்துள்ளது என்று ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.