காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து அமித்ஷாவிடம் கேட்டறிந்த மோடி...!!! இதற்கான முடிவு என்ன?
Modi asked Amit Shah about Kashmir terror attack
சுற்றுலா பயணிகள் 'ஜம்மு காஷ்மீர்' பஹல்காம் பகுதியில் இன்று சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கர தீவிர வாதிகள் திடீரென கடுமையான தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்தத் திடீர் தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் அகல மரணமடைந்தார். அதுமட்டுமின்றி,10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் காவலர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்த சூழலில், சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அப்போது மோடி, ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். மேலும்,காஷ்மீர் நிலைமையை கண்காணிக்கும் படி உத்தரவிட்ட பிரதமர் மோடி, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இது குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Modi asked Amit Shah about Kashmir terror attack