தேசிய கல்வி கொள்கை; 01 முதல் 05-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது மகாராஷ்டிரா..!
Maharashtra has suspended the order making Hindi compulsory from class 01 to 05
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மராத்தி, ஆங்கிலம் வழி பள்ளிகளில் 03-வதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 04-ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை 03-வது மொழியாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 01-ஆம் வகுப்பில் 2025-2026-இல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
02, 03, 04 மற்றும் 06-ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-இல் அமல்படுத்தப்படும். 05, 09 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 08, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 2028-29-ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இந்தி திணிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 05-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra has suspended the order making Hindi compulsory from class 01 to 05